28 July 2026

ஆயிரம் இருந்தென்ன எனக்கு இயேசுவின்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரம் இருந்தென்ன எனக்கு

                        ஏசுவின் அன்பு ஒன்று போதுமே

                        என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே - 2

 

1.         அன்பிற்கு ஆழம் இல்லை

            அன்பிற்கு அகலம் இல்லை - 2

            ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே - (4) - ஆயிரம்

 

2.         எங்கோ நான் பிறந்தேன்

            எங்கோ நான் வாழ்ந்தேன் - 2

            வழி தப்பி திரிந்தேனய்யா - (2)

            அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் - (2) - ஆயிரம்

 

3.         மலைகள் விலகினாலும்

            பர்வதங்கள் பெயர்ந்தாலும் - 2

            கிருபை மாறாதய்யா - (2) - ஆயிரம்

 

4.         கல்வாரி அன்பிற்கு

            இணை ஏதும் இல்லையே - 2

            கல்வாரி நாயகா உன் அன்பு போதுமே - (4) - ஆயிரம்

 

5.         பரலோக மேன்மையை விட்டு

            என்னை தேடி வந்தீரே - 2

            அன்பை நான் எப்படி பாடுவேன் - (4) - ஆயிரம்

 

6.         அன்பிற்கு பதிலாக

            என்ன நான் கொடுப்பது - 2

            என்னையே பலியாக கொடுத்துவிட்டேன்

            என்னை நான் பலியாக கொடுத்துவிட்டேன் - (3) - ஆயிரம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...