28 July 2026

ஆசை ஆசையாய் பாசம் பாசமாய் வளர்த்தவன

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆசை ஆசையாய் பாசம் பாசமாய் வளர்த்தவன

            பறிகொடுத்த தாயே நீயும் கலங்காதே

            கருவைப் புல்லைப்போல் கண்ணு மணியைப்போல் காத்தவன

            மண் விழுங்கியதோ மகளே கலங்காதே

            நமக்காக தேவன் இயேசுவை பலியாக கொடுத்தாரே

            மூன்றாம் நாளில் இயேசுவை உயிரோடு எழுப்பினாரே

 

                        அந்த அன்புக்கு ஈடு இல்லை

                        அந்த தேவன் நம்மை மறக்கவில்லை - 2

 

1.         கல்லறைமுன் காத்திருந்து நெஞ்சில் அடித்து அழுகின்றாய்

            மகன் வாழ்ந்ததையும் வளர்ந்ததையும் எண்ணி நீயும் ஏங்குகின்றாய்

            சொந்தங்கள் ஏதேதோ சொன்னார்கள்

            பந்தங்கள் ஏதேதோ செய்தார்கள்

            உன் பாரம் இன்னும் மாறவில்லை

            உன் கண்ணில் ஈரம் காயவில்லை

            ஒருநாள் இயேசு வருவார் அப்போது உன் மகனைக் காண்பாய் - ஆசை

 

2.         மரித்தவரை நினைத்து உண்ணாமல் நீயும் இருக்கின்றாய்

            உடைமைகளைப் பார்த்து உறங்காமல் நீயும் தவிக்கின்றாய்

            யார் யாரோ வந்தார்கள், யார் யாரோ போனார்கள் - (2)

            உன் கவலை இன்னும் மாறவில்லை

            உன் கலக்கம் இன்னும் தீரவில்லை

            ஒருநாள் இயேசு வருவார் அப்போது உன் மகனைக் காண்பாய் - ஆசை

           

 

https://www.youtube.com/watch?v=ylRbB4v-76s

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...