ஆகா என கண்கள் வியந்து போனதே
எந்தன்
ஆத்ம நேசரே என் இயேசுவே
ஆகாயமாய்
ஆசை வளருகின்றதே
பாசம்
மலருகின்றதே என் தேவனே
ஏகாந்தமாய்
என்னை இணைத்துக் கொண்டவர்
அன்பில்
நனைத்துக் கொண்டவர் தேவனே
எக்காளமும்
நெஞ்சில் தூய்மை தந்தவர்
அன்பில்
தாழ்மையானவர் இயேசுவே - ஆகா என
1. அருகில்
நீர்தான் இருக்கும் வரையில்
சுமைகள்
என்னில் சிதைந்து போகுமே
பெருகும்
கூட்டம் வெகுண்டு ஓடவே
விரைந்து
வந்தீர் என் அன்பு நேசரே
இனி காலம்
உள்ளவரை
என் கண்களோ
மகிழும்
என் ஜீவன்
உள்ளவரை
உயிர்
நாதமும் மகிழும் - இயேசுவே - ஆகா என
2. இரவும்
பகலும் நினைக்கும் பொழுதும்
இருந்தீர்
மலர்ந்தீர் எந்நாளும் காக்கவே
சிலுவை
சுமந்து மயக்கம் அடைந்தும்
முயன்றீர்
எழுந்தீர் உன்னதம் செய்யவே
இனி காலம்
உள்ளவரையில்
என் கண்கள்
உம்மைத் தேடும்
என் ஜீவன்
உள்ளம்வரை
உயிர்
நாதம் உம்மைத் தேடும் - இயேசுவே - ஆகா என
No comments:
Post a Comment