27 July 2026

அழகிற் சிறந்த கோமானை நானெப்போ

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?

            பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? - (2)

 

2.         பூதலத்தில் யான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே

            ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி சொல்வேன் - (2) - அழகிற்

 

3.         இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?

            செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே - (2) - அழகிற்

 

4.         சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;

            வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் - (2) - அழகிற்

 

5.         ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;

            காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் - (2) - அழகிற்

 

6.         பதினாயிரம்பேர் ஆயினும் இவரே அழகில் சிறந்தவராம்

            பாவிதாம் எமையே கண்மணிப்போல கருத்தாய் காப்பவராம் - (2) - அழகிற்

 

7.         நாதன் கிறிஸ்தேசையன்னை தேவ பிள்ளைகள் ஓதிடவே

            மாதுசீயோன்கு மாரி மகிழ்ந்து மங்களம் பாடிடவே - (2) - அழகிற்

 

 

- வேதநாயகம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...