1. ஆதி
தேவனே ஈசாயின் கிளையாய்
தாழ்மை சாயலாய் பூலோகில் ஜென்மித்தார்
விண்ணில் மகிழ்ச்சியாய் திரள்சேனை கீதம்
மண்ணிலே நாமொன்றாய் கூடியே பாடுவோம்
சாஷ்டாங்கம் செய்வோம் நாம்
2. தேவ ஆவியாய் தியாகத்தின் சாயலாய்
மாம்ச தேகமாய் லோகத்தின் மீட்புமாய்
பாவங்கள் போக்கினார் பகைமை நீக்கினார்
புதிய சிருஷ்டியாய் நம்மையும் மாற்றினார்
தேவனோடினைத்தார்
3. விண்ணில் ஓர்ஜோதி பாலனின் சாட்சியாய்
முன்னோக்கி செல்லவே சாஸ்திரிகள் கண்டனர்
மன்னர் இயேசுவை மானிடர் காணவே
தேசத்தின் எல்லைகள் எங்கிலும் செல்லுவோம்
சாட்சியாய் வாழுவோம்
No comments:
Post a Comment