அவர் இல்லாமல் நான் என்றும்
இல்லை
அவர் கிருபை இல்லாமல் நான் வாழ்வதில்லை - 2
என் எண்ணங்கள் பலிப்பதில்லை
என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை - 2
என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை - (2)
இல்லை - அவர்
1. காலை விடிவதில்லை
பொழுது போவதில்லை - 2
மாலை வருவதில்லை
என் தாகம் தீர்வதில்லை - 2 - அவர்
2. தாயும் தந்தையும் அவரே
என்னைத் தாங்கும் தெய்வமும் அவரே - 2
மாயையான இவ்வூலகில்
என் ஆயனும் நேயனும் அவரே - 2 - அவர்
3. என் இல்ல தலைவனும் அவரே
என் உள்ள நாயகனும் அவரே - 2
என் சிறப்பு விருந்தினரும் அவரே
என் இதய மணாளனும் அவரே - 2 - அவர்
4. என் வாழ்விலும் தாழ்விலும் அவரே
என்னை நடத்திச் செல்பவரும் அவரே - 2
எனை ஆள வைப்பவரும் அவரே
என்னை ஆண்டுக்கொள்பவரும் அவரே - 2 - அவர்
Pr. Moses Rajasekar
No comments:
Post a Comment