28 July 2026

ஆபிரகாமின் தேவன் உன்னோடு இருக்க

பாடல்

To Download Txt Lyrics file

 

          ஆபிரகாமின் தேவன் உன்னோடு இருக்க

            அழுதிடாதே மனமே

            அனாதி தேவன் உன்னோடு இருக்க

            அழுதிடாதே மனமே

 

                        அழுதிடாதே நீ அழுதிடாதே

                        அனாதி தேவன் உன் அடைக்கலமே

                        அழுதிடாதே நீ அழுதிடாதே

                        அனாதி தேவன் நம் அடைக்கலமே

 

1.         அன்று ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்

            இன்று உனது கண்ணீரைக் காண்கிறார் - 2

            அற்புதம் செய்வார்

            அதிசயம் செய்வார் - 2

            அழுதிடாதே நீ அழுதிடாதே - (2) - ஆபிரகாமின்

 

2.         அன்று எலியாவை காகம் கொண்டு போசித்தவர்

            இன்று உன்னை போசிப்பார் - 2

            உன்னையும் போசிப்பார்

            குடும்பத்தைப் போசிப்பார் - 2

            அழுதிடாதே நீ அழுதிடாதே - (2) - ஆபிரகாமின்

 

3.         அன்று ஆடுகள் மேய்த்து வந்த தாவீதை

            அரசனாய் தேவன் உயர்த்தினாரே - 2

            உன்னையும் உயர்த்துவார்

            உயர்த்திக் காட்டுவார் - 2

            அழுதிடாதே நீ அழுதிடாதே - (2) - ஆபிரகாமின்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...