அழைக்கிறார் அழைக்கிறார்
விரும்பி
வருந்தி அழைக்கிறார்
அழைக்கிறார்
அழைக்கிறார்
பாவி
ஓடி நீ வா
1. இந்த தருணத்தை
விட்டுவிடாதே நீ
இந்த தருணத்தை
விட்டால் வருந்துவாய்
வல்லமையுள்ளவர்
மகிமையில் உன்னை
சேர்த்துக்
கொள்ளவே - அழைக்கிறார்
2. நியாயந்
தீர்த்திடவே பாவி பாவி பாவி
நியாயந்
தீர்த்திடவே பாவி பாவி பாவி
மரித்தோரெல்லாம்
அவர்முன் நிற்கும்
காட்சி
பயங்கரம் - அழைக்கிறார்
3. ஜீவ வழி
தப்பி மோசம் போகாதே நீ
பாவ வழி
சென்று சாவை விரும்பாதே
கிறிஸ்துவே
வழியும் சத்தியமும் ஜீவனும்
தாமதம்
செய்யாதே வா! - அழைக்கிறார்
4. உன்னை அழைப்பவர்
யாரென்றறிந்தாயா?
கதவை தட்டும்
சத்தம் நீ கேட்கவில்லையா?
விண்ணுலகத்தின்
மகிமை துறந்த
கிறிஸ்து இயேசுவே - அழைக்கிறார்
- சகோ. பாலாசீர் லாறி
https://www.youtube.com/watch?v=w2FAo3X1eKs
No comments:
Post a Comment