27 July 2026

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

                        ஆவலாய் நாம் செல்லுவோம் (2)

                        அவர் பலியினில் கலந்திட

                        அவர் ஒளியினில் நடந்திட (2)

                        சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே - அழைக்கிறார்

 

1.         தேடியே தேவன் வருகிறார்

            தன்னையே நாளும் தருகிறார்

            தோள்களில் நம்மைத் தாங்குவார்

            துயரினில் அவர் தேற்றுவார்

                        சுமைகளை சுகங்களாக மாற்றுவார்

                        வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2

            வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்

            வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் - அழைக்கிறார்

 

2.         அன்பினால் உலகை ஆளுவார்

            ஆவியால் நம்மை நிரப்புவார்

            அமைதியை என்றும் அருளுவார்

            ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்

                        விடியலின் கீதமாக முழங்குவார்

                        விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2

            வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்

            வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் - அழைக்கிறார்

 

 

https://www.youtube.com/watch?v=pHp1b9bcr6s

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...