28 July 2026

ஆகானைக் கொன்றதும் உலகம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆகானைக் கொன்றதும் உலகம்

                        அந்த ஆமானைக் கொன்றதும் உலகம் - 2

                        உலகின் பின்னே நீயும் சென்றால்,

                        உன்னையும் கொன்றிடும் உலகம் - 2 - ஆகானைக்

 

1.         நாகமானின் குஷ்டம் கேயாஸிக்கு - எதற்கு

            அந்தக் கேயாசியின் குஷ்டம் சீயோனுக்கு - எதற்கு

            போ என்று சொன்னதும் போனால் என்ன

            ஆரானைவிட்டு போனால் என்ன

            ஆபிரகாம் போனதுபோல் போனதுபோல் - ஆகானைக்

 

2.         தூக்கு கயிறு தொங்குதே யூதாசுக்கு - எதற்கு

            உப்புத் தூணாய் ஆனது லோத்தின் மனைவி - ஐயகோ

            அருமையான உயிர்களை உலகம் வேட்டை ஆடுதே

            அடங்காத பசியுடன் தனது வாயை பிளக்குதே

            யாரது போவது போவது போவது - ஆகானைக்

 

3.         தேவையான வாலிபனைத் தெருவில் கண்டேன் கவனித்தேன்

            அவன் வேசியின் வீட்டைத் தேடி வேகம் செல்கிறான் ஐயகோ

            கண்ணி அறியாமல் விழுந்து மாளும் குருவிபோல்

            வஞ்சகியின் வலையில் சிக்கி பலியாகி கிடக்கிறான்

            இயேசுவை மறந்ததால் மறந்ததால் மறந்ததால் - ஆகானைக்

            (அம்பு அவன் இரலைப் பிளந்தது)

 

 

- Bro. A. Thomas

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...