அருட்கரம் தேடி உன் ஆலயபீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்
1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை - 2
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன் - 2
2. ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே - 2
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும் - 2
No comments:
Post a Comment