27 July 2026

அந்த சூரியன் அந்த சந்திரன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            அந்த சூரியன் அந்த சந்திரன்

            இந்த பூலோகம் யாவும்

            அந்த மழைத்துளி இந்த பனித்துளி

            இயற்கை அழகு யாவும்

            படைப்பே உந்தன் படைப்பே

 

                        அதை நினைத்து மனம் மகிழ்ந்து

                        உம்மை வாழ்த்திடுவேனே - 2

 

1.         வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்

            தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்

            மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் - (2)

            நீரே தேவன் நீரே தேவன்

            எல்லாம் உம் கை வண்ணமே - ஓ - (2) - அந்த

 

2.         மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்

            கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்

            விழுந்தாலும் எழுப்பி விட்டீர் அழுதாலும் துடைத்து விட்டீர் - (2)

            கண்ணீரை கண்ணீரை

            இதயத் துடிப்பும் நீரே - ஓ - (2) - அந்த

 

 

- RAVI BHARATH

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...