28 July 2026

ஆதியிலே ஒரு கல்யாணம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதியிலே ஒரு கல்யாணம்

            அது ஏதேனிலே நடந்த கல்யாணம் - 2

 

                        டும் டும் டும் மேளம் இல்ல

                        பி பி பி நாதமில்ல

                        அலங்கார மேடை இல்ல

                        கல்யாணத்துக்கு ஆளும் இல்ல

                        மண்ணால் செய்த மாப்பிள்ளை

                        அவன் எலும்புல தான் பொண்ணு - ஆதியிலே

 

1.         மண்ணால் செய்த மாப்பிள்ளை

            ஆதாம் அண்ணாச்சி

            பொண்ணு எலும்பு அக்காவும்

            ஏவாள் தானுங்க - 2

            தேவனவர் உறவிலே

            தினமும் இன்பம் கண்டாங்க - 2 - ஆதியிலே

 

2.         சாத்தான் வந்த வேளையில்

            பாவம் வந்தது

            பாவம் வந்த பின்னாலே

            சாபம் வந்தது - 2

            இன்பம் எல்லாம் மாறிற்று

            துன்பம் வந்து சேர்ந்தது - 2 - ஆதியிலே

 

3.         மணமக்களே மணமக்களே

            நல்லா கேளுங்க

            மன்னர் இயேசு உறவினிலே

            செழித்து வாழுங்க - 2

            ஜெபம் வேத வாசிப்பு

            ஜெயம் தரும் வாழ்விலே - 2 - ஆதியிலே

 

 

- Kadayanodai I. Packianathan

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...