28 December 2023

கூடும் எல்லாம் கூடும்

கூடும் எல்லாம் கூடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கூடும் எல்லாம் கூடும்

                        என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

                        கூடும் எல்லாம் கூடும்

                        அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை

                        அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவது இல்லை

                        இயலாதது என்பது அவர் அகராதியில் இல்லை

 

1.         அவர் வார்தையினாலே உலகம் உண்டானது

            அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது

            அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது

            அவர் வார்த்தையினாலே செவிடர் காது கேட்டது

 

                        அவர் வார்த்தை ஒன்று போதும்

                        உன் நிலமையை மாற்ற

                        அவர் வார்த்தை ஒன்று போதும்

                        உன் துக்கத்தை போக்க கூடும்

 

2.         அவர் வார்த்தையினாலே பாவத்தை மேற்கொள்வேன்

            அவர் வார்த்தையினாலே சத்துருவை வெல்வேன்

            அவர் வார்த்தையினாலே தோல்விகளை முறிப்பேன்

            அவர் வார்த்தையினாலே வாழ்க்கையிலே ஜெயிப்பேன்

            அவர் வார்த்தை ஒன்று போதும் என்னை விடுதலையாக்க

            அவர் வார்த்தை ஒன்று போதும் என்னை பரலோகம் சேர்க்க - கூடும்

 

3.         கடனா அதை அடைக்க கூடும்

            கடினம் அதை முறிக்கக்கூடும்

            வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடும்

            கூடாதது ஒன்றுமில்லை சோர்வை தேற்றக்கூடும்

            கண்ணீரை மாற்றக் கூடும்

            பிரிவை சேர்க்கக் கூடும்

 

 

https://www.youtube.com/watch?v=HhX0mTsi6_E

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...