சகத்திருள் மாறவே மகத்தான மிக்கானவான

சகத்திருள் மாறவே மகத்தான மிக்கானவான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

வெண்பா

 

            பகுத்தபலர் சேனைகளு மண்டப் பரப்பும்

            வகுத்த பராபர வஸ்து - மகத்துவ

            மகத்தான மிக்கானவான தந்தை சேயர்

            சகத்திருள் மாறவந்த னர்.

 

கேதாரகௌளை                                               ஆதி தாளம்

 

பல்லவி

                   சகத்திருள் மாறவே மகத்தான மிக்கானவான

                        தந்தை சேயர் வந்தருளினார்.

 

சரணங்கள்

 

1.         மகத்துவமான தேவன்

            பரத் தொளிவான ஜீவன்

            மைந்தர் சொந்த வடிவாகினார்.            - சக

 

2.         அதமே வைபாவத்தாலே

            அனுக்கிரக மானுவேலே

            அம்புவிதனின் மேவினார்.                     - சக

 

3.         இத்தனை நேசமாகப்

            பத்தரெந் நாளும் வாழ்க

            எந்தையா ரெழுந்தருளினார்.                - சக

 

4.         திரித்துவனாதி நேச

            கிறிஸ்திச றேலின் ராஜ

            திவ்விய பாலன் வந்தருளினார்.             - சக

 

5.         மெத்தனவாக நாடிப்

            பெத்தலேகேமை நீடி

            மேசியா பிறந்தருளினார்.                      - சக

 

https://www.youtube.com/watch?v=7YVFOJ--hdE

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு