இயேசு பாலன் பிறந்த செய்தி

இயேசு பாலன் பிறந்த செய்தி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    இயேசு பாலன் பிறந்த செய்தி எங்கும் சொல்லுவோம்

                        ஆனந்தமாய் பாட்டுப்பாடி நடனம் ஆடுவோம் - 2

                        ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

                        இயேசு பாலன் பிறந்தார் என்று எங்கும் சொல்லுவோம் - 2

 

1.         வானில் தூதர் கூட்டம் ஒன்று பாட்டுப் பாடவே

            வயலின் மேய்ப்பர் சேர்ந்து வந்து செய்தி சொல்லவே - 2

            விடிவெள்ளி ஒன்று வந்து பாதை காட்டவே

            ஞானியரும் தேடி வந்து தொழுது செல்லவே (2) - இயேசு பாலன்

 

2.         தீர்க்கன் சொன்ன கன்னி(யின்) மைந்தன் வந்து பிறந்தாரே

            மண்ணின் பாவம் போக்க மீட்பர் பாலன் ஆனாரே - 2

            ஏதேனின் பாவம் முற்றும் பரிகரித்தாரே

            இம்மானுவேலன் இயேசு வந்து பிறந்தாரே (2) - இயேசு பாலன்

           

3.         இறைநீதி இறையாட்சி எங்கும் மலர்ந்திட

            அனைவருமே இறையரசின் சொந்தமாகிட

            பகை மறந்து மனிதன் இங்கு புனிதமாகிட

            மாந்தர் எல்லாம் ஒரு குடும்பம் உணர்வு வளர்ந்திட (2) - இயேசு பாலன்

 

https://www.youtube.com/watch?v=jQXupnAVyPY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு