கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்

            சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்

            ஆவியினால் ஆண்டவனை

            அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

 

                        விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்

                        மண்ணுலகம் வியந்து கொண்டாடும்

                        மனங்களில் அமைதி வென்றாளும்

                        மனிதரில் பாசம் உண்டாகும்

 

1.         கிருபையினால் மா தேவன் - இரக்கம்

            பெற்றாள் பணிந்ததினால்

            மகிமையின் கர்த்தனிடம்

            வலிமையின் தேவனிடம்

            பலவான்கள் தலைகுனியும் - இனி

            கனவான்கள் கைவிரியும்

 

2.         தெய்வத்தின் நல் விருப்பம் - என்றும்

            தெய்வமகன் விரும்பும் அப்பம்

            ஜீவனின் அதிபதிதான்

            ஜீவனைக் கொடுக்க வந்தார்

            பாவத்தைத் தொலைக்க வந்தார் - வல்ல

            சாத்தானை ஜெயிக்க வந்தார்

 

3.         மானுட அவதாரம் - ஒன்றே

            ஆண்டவரின் திரு விருப்பம்

            தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்

            பசித்தவர் விருந்துண்பார்

            புதியதோர் சமுதாயம் - இனி

            மலர்ந்திடும் அவனியெங்கும்

 

https://www.youtube.com/watch?v=jWB6U9jLpgM

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே