09 December 2023

துதித்து பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

துதித்து பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          துதித்து பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

            தூயனேசு மானிடனாய் ஜெனித்தார்

            ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்

            அன்பரேசு மானிடனாய் ஜெனித்தார்

                        வானமே - வையமே

                        வாழ்த்துங்கள் மகிழுங்கள்

                        தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

                        தாழ்மையின் ரூபமாய் ஜெனித்தார்

 

1.         வானதூதர் விண்ணின் நல்வாழ்த்துதல் தந்தார்

            கானமேய்ப்பர் ஆட்டுகுட்டி அன்புடன் கொடுத்தார்

            ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்

            மானிடர் நாம் இதயங்களை ஈந்திடுவோமே - வானமே

 

2.         சிருஷ்டிகளே சிருஷ்டிகரை போற்றி துதியுங்கள்

            படைப்புகளே படைத்தவரை பாடித்துதியுங்கள்

            மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்

            வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் - வானமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...