எத்தனை எத்தனை இன்னல்கள்
எத்தனை
எத்தனை இன்னல்கள்,
என்னை தாக்கின
அத்தனை
அத்தனை கிருபைகள்,
என்னை தாங்கின;
எத்தனை
எத்தனை இன்னல்கள்,
என்னை சூழ்ந்தன,
அத்தனை
அத்தனை கிருபைகள்,
என்னை சுமந்தன
- (2)
இமைக்குள்,
கண்கள் போல், என்னை
காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள்,
முத்து போல், என்னை
காத்திட்ட தேவன்;
இமைக்குள்,
கண்கள் போல், என்னை
காத்த நல் தேவன்,
சிப்பிக்குள்,
முத்து போல், என்னை
காத்த நல் தேவன்.
எத்தனை
எத்தனை இன்னல்கள்,
என்னை தாக்கின,
அத்தனை
அத்தனை கிருபைகள்,
என்னை தாங்கின.
ஆ,.... அ அ ஆ,.... அ அ ஆ,
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ,... அ அ ஆ,
ஆ,... அ அ ஆ. -(2)
1. வியாதி
என்னும் இன்னல்
வந்து, என்னை தாக்கிற்று,
சோர்வு
என்னும் இன்னல்
வந்து, என்னை தாக்கிற்று
- (2)
சிறகின்,
மறைவில், என்னைக்
காத்திட்ட தேவன்,
கருவில்,
சிசு போல், என்னை
காத்திட்ட தேவன்;
சிறகின்,
மறைவில், என்னை
காத்த நல் தேவன்,
கருவில்,
சிசு போல், என்னை
காத்த நல் தேவன்;
- எத்தனை
2. தோல்வி
என்னும் இன்னல்
வந்து, என்னை தாக்கிற்று,
பாவம் என்னும்
இன்னல் வந்து,
என்னை தாக்கிற்று
-(2)
சிலுவை,
நிழலில், என்னைக்
காத்திட்ட தேவன்,
தமக்குள்,
எனையும், வைத்துக்
காத்திட்ட தேவன்;
சிலுவை,
நிழலில், என்னை
காத்த நல் தேவன்,
தமக்குள்,
எனையும், வைத்துக்
காத்த நல் தேவன்;
- எத்தனை
- Pr. Johnkish Theodore Isaac
https://www.youtube.com/watch?v=X8ajscD2pak
Comments
Post a Comment