19 December 2023

தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தந்தை தந்தை தந்தைத் திருமகன்

                        இந்த இந்த இந்தத் புவிதனில்

                        விந்தை விந்தை மரியிடமே

                        மைந்தனுருவானார்

 

1.         சொந்த சிலாக்கியமும் மறந்தார்

            நிர்ப்பந்தர்கள் மீதிலே அன்பு கூர்ந்தார்

            மந்தையர்கள் கண்டு களிகூர்ந்தார் - ஏவை

            சந்ததியாய் பிறந்தார்

 

2.         பெத்துலகேம் என்னும் ஊரினிலே கொடும்

            பேய்கள் நிறைந்த இப்பாரினிலே

            பத்தனாந் தாவீது வேரினிலே - மனு

            புத்திரனாய் பிறந்தார்

 

3.         ஆயர்கள் கூடி ஏற்றிடவே அவர்

            ஆச்சரியத்துடன் போற்றிடவே

            நேயமாய் பக்தரை தேற்றிடவே - இவர்

            நீசக்குடிலில் பிறந்தார்

 

4.         வேதமதை நிறை வேற்றிடவே நம்

            வினை துயர் யாவையு மாற்றிடவே

            தூதர்கள் கூடி புகழ் ஏற்றவே - இத்

            தொல்லுலகில் பிறந்தார்

 

 

https://www.youtube.com/watch?v=TJyHcRtrlJc

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...