புவியாள வந்தவரே பவ நாசம் நீக்கிடவே
பல்லவி
புவியாள
வந்தவரே
பவ
நாசம் நீக்கிடவே
இருள்
யாவையுமே
அகற்றி நிதமே
புது
வாழ்வு அளித்திட
வந்தவரே
சரணங்கள்
1. ஆயர்
குடிலை தேடி வந்தார்
அவனியை
மீட்கும் பாலகன்
இவரே
அதிசயம்
செய்யும் தெய்வம்
இவரே
அவனியுள்ளோரே
வணங்கிடுவோம்
- புவியாள
2. வேதம் கூறும்
ஜோதி விளக்காய்
தன்னொளி
வீசிட பூவினில் பிறந்தார்
இழந்ததை
நாடி தேடி வந்தார்
அற்புத
பாலனைத் தொழுதிடுவோம்
- புவியாள
3. மாளிகையில்லை
மஞ்சமில்லை
ஏழைத்
தொழுவில்
இறைமகன் உதித்தார்
முன்னணைப்
பாலகன் மேசியா
இவரே
வல்ல பிதாவை
பணிந்திடுவோம்
- புவியாள
4. விண்ணோர்
துதிக்க மண்ணோர்
மகிழ
உன்னத பாலகன்
உலகினில் உதித்தார்
தாழ்மையின்
ரூபமாய் தாரனி மீதினில்
தற்பரன்
இயேசு அவதரித்தார்
- புவியாள
5. தாவீதின்
வேராய் பூவில் வந்தார்
மண்ணுயிர்
மீட்டிடும்
பாலகன் இவரே
ஆறுதல்
அளிக்கும் தேவன்
இவரே
ஆண்டவர்
இவரை பணிந்திடுவோம்
- புவியாள
https://www.youtube.com/watch?v=z18jlCrIojA
Comments
Post a Comment