18 December 2023

பெத்தலைக்கு செல்வோம் வாருங்கள்

பெத்தலைக்கு செல்வோம் வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   பெத்தலைக்கு செல்வோம் வாருங்கள்

                        தேவ புத்திரனை காண சேருங்கள்

                        தேவாதி தேவன் ராஜாதி ராஜன்,

                        இயேசுவை தரிசியுங்கள்

 

சரணங்கள்

1.         முன்னவர்கள் முன்னுறைத்த பாலகன் இவர்,

            விண்ணவர்கள் காத்திருந்த சீலனுமிவர் - (2)

            இந்த மனிதரின் பாவத்தை நீக்கி மீட்ட நல் தேவன்,

            புனிதராய் வந்த நல் தெய்வம் இவரே - (2)        - பெத்தலைக்கு

 

2.         ஆயர் பலர் தேடி வந்த பாலகன் இவர்,

            ஞானி மூவர் நாடி வந்த நாயகன் இவர்  - (2)

            மிக அதிசயமானவர், ஆலோசனை கர்த்தராம்,

            சமாதான பிரபுவாம் இயேசு இவரே - (2)           - பெத்தலைக்கு

 

3.         தேவ தூதர் அறிவித்த தெய்வ பாலகன்,

            வான் வெள்ளி வழி காட்டின யூதரின் ராஜா - (2)

            ஆனால் ஏழையாய் பிறந்தவர் அரண்மனை துறந்தவர்,

            நம் வாழ்வின் வழிகாட்டி என்றுமிவரே - (2)      -  பெத்தலைக்கு

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...