ஒரு சின்ன பாலன் தூங்க

ஒரு சின்ன பாலன் தூங்க

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

                   ஒரு சின்ன பாலன் தூங்க

                        தேவ தூதன் அங்கே வாழ்த்த

                        அந்த காட்சியைத்தான் கண்டு ரசிக்கும்...

                        ஒரு புள்ளினங்கள் பாட

                        ஒரு தாரகையும் பார்க்க

                        தேவ மைந்தன் இங்கே தூங்குகின்றாரே...

                                    ஒளி பிறந்தது இங்கே

                                    இருள் மறைந்தது அங்கே - (2)

                        உலகை காக்க இயேசு வந்தாரே (2) - ஒரு சின்ன

 

1.         ஒரு பூ மலர்ந்தது போல

            புல்லணையில் தூங்குகிறார் இயேசு பாலனும்

            புது ஒளி பிறந்தது போல

            மகிமையின் தீபமாய் மண்ணில் வந்தாரே

                        நல் ஆயனை நமக்காய் தந்தை தந்தாரே

                        நம் வாழ்வில் நம்பிக்கை துளிர்த்திட வந்தாரே

            என் இயேசுவே, என் ராஜனே

            என்னை மீட்க வந்த அன்பு தெய்வமே - 2 - ஒரு சின்ன

 

2.         முழு நிலவு வந்தது போல

            முன்னணையில் தூங்குகிறார் இயேசு பாலனும்

            புது உறவு வந்தது போல

            புண்ணகையும் சிந்துகின்றார் இயேசு பாலனும்

            விழி ஓரம் ஒரு சுடராய் நல் வரவை தந்தாரே

            வழி சொல்லும் ஒரு மனுவாய் நல் வரவைத் வந்தாரே

                        என் இயேசுவே, என் ராஜனே

                        என்னை மீட்க வந்த அன்பு தெய்வமே - ஒரு சின்ன

 

https://youtu.be/qOo4MFD4k_Q?si=zknyuCRs2PkhgKYs

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு