15 December 2023

என்னிடம் ஒன்றுமில்லை என்று

என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது

                        உம் அதிசய கரம் நடத்திற்று -2

 

1.         தாசன் எலியா காலத்தில் காகம் மூலம் போஷித்தீர்

            தாசன் மோசே காலத்தில் மன்னா மூலம் போஷித்தீர் - 2

                        செருப்பும் தேயவில்லை

                        துணியும் கிழியவில்லை

                        உம் அதிசய கரம் நடத்திற்று - 2 - என்னிடம்

 

2.         இரவில் கிடந்து புலம்பினேன் நடக்கும்போதும் புலம்பினேன்

            வறுமை நினைத்து கலங்கினேன் நிஜத்தை நினைத்து கதறினேன் - 2

                        உண்ண உணவும் தந்தீர்

                        உறங்க இடமும் தந்தீர்

                        உம் அதிசய கரம் நடத்திற்று - 2 - என்னிடம்

 

3.         நண்பர்களும் மரித்தனர் உறவினரும் மரித்தனர்

            மரண ஓலம் ஒலித்தன கல்லறைகள் நிரம்பின - 2

                        உயிருடன் நான் இருக்கிறேன்

                        சொல்ல சொல்ல துடிக்கிறேன்

                        உம் அதிசய கரம் நடத்திற்று

            உயிருடன் நான் இருக்கிறேன்

            சாட்சி சொல்ல துடிக்கிறேன்

            உம் அதிசய கரம் நடத்திற்று  - என்னிடம்

 

- Pr. Johnkish Theodore Isaac

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...