01 December 2023

மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில்

மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில்

            மந்தையை காத்திடவே

            வானத்தில் தூதர்கள் சந்தோஷ செய்தியை

            மேய்ப்பர்க்கு அறிவித்தார்

 

                        எல்லா ஜனத்திற்கும் நற்செய்தியாம்

                        கர்த்தராம் ரட்சகர் பிறந்துள்ளார்

                        உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்

                        மானிடர் மேலே அன்பு என்றென்றும் உண்டாகவே

 

2.         விண்ணகம் துறந்து மண்ணகம் பிறந்த

            மன்னவன் இயேசுவினால்

            என்றென்றும் நிறைந்து தங்கிடுமே அங்கு

            உன்னதத்தில் மகிமை - எல்லா

 

3.         பாவத்தால் சாபத்தால் சமாதானமின்றி

            வாடிடும் மாந்தர்கட்கு

            ஆறுதல் தந்திடும் தேறுதல் வார்த்தையாம்

            பூமியில் சமாதானம் - எல்லா

 

4.         ஏழைகள் திக்கற்றோர் அனாதை வறியோர்

            ஆதரவேதுமின்றி

            அலையும் வேளையில் தூதரின் நல்வார்த்தை

            மானிடர் மேலே அன்பு - எல்லா

 

5.         தூதர்கள் செய்தியை கேட்டிட்ட ஆயர்கள்

            பெத்லகேம் நகர் சென்று

            அற்புத பாலனாம் இயேசுவை கண்டனர்

            பணிந்து வணங்கினர்

 

                        எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமாம்

                        நற்செய்தி கூறிட சென்றிடுவோம்

                        இயேசுவின் பாதத்திலே ஜனங்கள் எல்லாருமே

                        பணிந்து வணங்கியே பாக்கியம் அடையட்டும்

 

https://www.youtube.com/watch?v=CBW2-q9-Y5A

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...