வெறுமையும் தனிமையும் ஆனேன்
வெறுமையும்
தனிமையும்
ஆனேன்
என்
இயேசுவை வெகு தூரத்தில்;
நிறுத்தினேன்
நானே, பைத்தியமானேன்,
இயேசுவை
வெகு தூரத்தில்
(2)
1. ஆவியும்
அனலும் இல்லை,
உற்சாகம்
ஒன்றும் இல்லை
- (2)
சோர்வுற்று
சோம்பலாய்
முடியாத என்னை,
மீட்டிட
யாரும் இல்லை
- (2)
மீட்டிட
யாரும் இல்லை.
2. குடும்பத்தில்
ஐக்கியம்
இல்லை,
வாழ்க்கையில்
வெற்றி இல்லை
- (2)
பணத்திமிர்
பெருமையில்
மூழ்கின என்னை,
தீண்டிட யாரும்
இல்லை - (2)
தீண்டிட
யாரும் இல்லை.
3. அன்றொரு நாள்
இரவில்,
பயந்து
நான் தூங்குகையில்
- (2)
ஆயிரம்
தூதர்கள் சூழ்ந்திட
என்னை,
அரவணைத்தவரைக்
கண்டேன் - (2)
அரவணைத்தவரைக்
கண்டேன்.
வெறுமையும்
தனிமையும்
போனதே,
என்
இயேசுவை கண்டதிலே;
எழும்பினேன்
நானே, தெளிந்தவனானேன்,
இயேசுவை
கண்டதிலே
- (2)
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment