08 November 2022

இயேசுவின் சிந்தையை தரிப்போம்

இயேசுவின் சிந்தையை தரிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   இயேசுவின் சிந்தையை தரிப்போம்

                        நேசமொடவரின் அன்பில் சுகிப்போம்

 

1.         சுத்த இதயத்தை சுதந்தரமாக்கி

            நித்திய வாழ்வதை நினைவதில் ஆக்கி

            சத்திய வேதம் சர்வாயுதமாக்கி

            கர்த்தரை பார்த்து நடப்போம்

 

2.         கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக

            நஷ்டம் என்றே உணராதவராக

            கன மகிமை உண்டு பண்ணுதற்காக

            மன மடிவின்றி நடப்போம்

 

3.         பொறுமை இல்லாதவர் முறுமுறுத்தாலும்

            உரிமை இல்லை என்று வெறுத்துவிட்டாலும்

            சிலுவையின் பாடுகள் சகித்தவர் போல

            சினம் அடையாது நடப்போம்

 

4.         கள்ள சகோதரர் கலக்கிடும் போது

            சொல்லாதவைகளை சுமத்திடும் போது

            அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போது

            சொல் தவறாமல் நடப்போம்

 

5.         பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து

            நிந்திப்பவர்காய் நிதமும் ஜெபித்து

            சபித்திடும் சத்ருக்களை ஆசீர்வதித்து

            பிதாவை போல் ஆக கடவோம்

 

6.         மூல உபதேசங்களை கடந்து

            உலகத்தின் வேஷத்தை மனமுகர்ந்தருத்து

            நலமென காண்பதை நாடோறும் உணர்ந்து

            பூரணராகக் கடவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...