08 November 2022

அனுப்பும் தேவா உம் ஆவியினை

ஆ.கீ:14

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

          அனுப்பும் தேவா உம் ஆவியினை

            அடியார் மீதே இவ் வேளையிலே

 

                             அனுபல்லவி

 

                        பரிசுத்த ஆவி பலமாயிறங்கி

                        பின்மாரி பெய்திடவே (2) - அனுப்பும்

 

                             சரணங்கள்

 

1.         சுட்டெரிக்கும் தேவ அக்கினியே

            சுத்திகரிக்கும் என்னை

            குற்றம் குறைகள் கறைகளை

            முற்றும் நீக்கி சுத்தம் செய்ய - அனுப்பும்

 

2.         பெந்தே கோஸ்தே நாளில் சீஷர்கள்மேல்

            பலத்த காற்றாய் வந்தீர்

            பலவீனர் எம் உள்ளத்திலும்

            தேவ பலனை பெற்றிடவே - அனுப்பும்

 

3.         மீட்கப்படும் நல் நாளுக்கென்று

            பெற்ற உம் ஆவிதனை

            சுத்தப் படுத்தும் பாதுகாத்து

            தூய வழியில் நடந்திட - அனுப்பும்

 

4.         இளைத்துப்போன உள்ளம் பெலனடைந்து

            இடைவிடா சேவை செய்ய

            இரட்சகர் இயேசுவின் சாட்சியாக

            பாரில் எங்கும் ஜீவித்திட - அனுப்பும்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...