08 November 2022

மங்களம் நித்ய மங்களம்

மங்களம் நித்ய மங்களம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          மங்களம் நித்ய மங்களம்

            மங்களம் சத்திய மங்களம்

            மங்கள மணவாளன் இயேசுவின்

            மங்களம் மங்களமே.

 

                        மங்களம் மங்களமே, மங்களம் மங்களமே

                        மங்களம் மங்களம் மங்களம் மங்களமே

 

1.         பொங்கும் மங்களம் பூலோக வாழ்வினில்

            பூரணமாக பொழிந்திடவே

            மங்கா மங்களம் மாபெரும் மாரியாய்

            மாறாது பொழிந்திடவே

            பங்கமில் அன்பை அவர் பாங்காய் பகிர்ந்திடவே

            மங்களம் திரு மங்களம் சதா

            மங்களம் மங்களமே

 

2.         பரிசுத்த ஆகமம் பாதைக்கு தீபமாய்

            பகலோன் போல பரவிடவே

            தரிசித்து அவரின் தாளினை தாழ்மையாய்

            தவறாது அண்டிடவே

            கரிசனை உடன் இருந்து இவர் கரத்தனை காட்டிடவே

            திரித்துவ திரு மங்களம் சதா

            மங்களம் மங்களமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...