முன்னணை பாலன் இம்மானுவேலன்

முன்னணை பாலன் இம்மானுவேலன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          முன்னணை பாலன் இம்மானுவேலன்

            விண்ணகம் துறந்தாரே

            நம்மையே மீட்க தம்மையே கொடுக்க

            மண்ணிதில் பிறந்தாரே

 

                        லாலல்ல லாலல...

                        லாலல்ல லாலல...

                        லாலா லலல்லலா

 

1.         மாட்டுத் தொழுவைப் பார்

            தூதர் குழுவைப் பார்

            பிறப்பில் புதுமையே மகிபன் மகிமையே

            மின்னுது வானம் இன்னிசை கானம்

            சேனையின் துதிதானே

            விண்ணக வேந்தன் இம்மனுவேலன்

            மாமரி மகன்தானே

                        ஆரிராராரோ - 3

 

2.         ஊரும் உறங்குது உலகம் உறங்குது

             சபையோ விழிக்குது ஒளியாய் ஜொலிக்குது

            அகிலத்தின் பாவம் ஏதேனின் சாபம்

            அனைத்துமே நீங்கிடுதே

            துள்ளுது உள்ளம் பேரின்ப வெள்ளம்

            பாரெங்கும் பாய்ந்திடுதே

                        ஆரிராராரோ - 3

 

3.         மகிழும் மலரைப்போல் மகிபன் பிறந்தாரே

            மரியின் மடியிலே மகவாய்த் தவழ்ந்தாரே

            பட்சிகள் பாடும் புஷ்பங்கள் ஆடும்

            இயேசுவின் பிறப்பாலே

            உள்ளங்கள் புகழும் இல்லங்கள் மகிழும்

            கிறிஸ்மஸின் சிறப்பாலே

                        ஆரிராராரோ - 3

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு