08 November 2022

அடுத்த ஊர் செல்ல வேண்டும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அடுத்த ஊர் செல்ல வேண்டும்

            அதற்காகவே நான் இங்கு

            தடுக்காதே என்னை என்றீரே

            தேவைகள் அங்கும் உண்டு

            நேரப் பங்கீடும் உண்டு

            நிறுத்தாதே என்னை என்றீரே

 

                        கேட்டவர் கேட்டது போதும்

                        கேட்காதோர் எத்தனை பாரும்

                        வாருங்கள் அங்கு என்னுடன்

 

1.         ஒன்றுமில்லாதோர் பங்கு

            இயேசுவைப் பெற்றவர் பங்கு

            பங்கைச் செய்யவே நாம் இங்கு

            ஐந்து பத்தாக வேண்டும்

            இரண்டு நான்காக வேண்டும்

            பங்கைப் புதைத்தல் தவறு

 

2.         படைத்தவர் சொல்லைக் கேட்டால்

            அடுத்தவூர் அடுத்தவூர் என்று

            கூட்டிக்கொண்டே போவாரே

            பாத்திரம் நிரம்பி வழிய

            பேராசீர்வாதங்களையும்

            கொட்டிக் கொண்டேயிருப்பாரே

 

 

- எமில் ஜெபசிங் (1940-2013)

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...