08 November 2022

இது அதிசயமே எனக்கானந்தமே

இது அதிசயமே எனக்கானந்தமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   இது அதிசயமே எனக்கானந்தமே

                        இன்ப பரலோகம் துறந்தெனக்காய்

                        இகத்தில் இயேசுவே மனுவாய் உதித்தார்

 

1.         விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்

            என்னையும் எண்ணியே தம் மனதில்

            தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து

            தயாபரனாய் தோன்றினார் - தேவ

 

2.         மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்

            மா ப்ரபையோடிலங்கும் மகிபன்

            மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்

            தந்தாரே விந்தையிரே - கர்த்தர்

 

3.         சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே

            சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்

            நன்றியோடே நானும் பாடிடுவேன்

            தற்பரன் இயேசுவையே - எந்தன்

 

4.         பறந்திடும் பறவைக்கும் கூடு உண்டே

            பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே

            இயேசுவுக்கே தலை சாய்திடவோ

            எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்

 

5.         சாந்தமும் தாழ்மையும் நீதியுமே

            சிறப்புடன் விளங்கிடுதே - அவரில்

            இந்நுகமே எனக்கெந்நாளுமே

            சொந்த மென்றேற்றிடுவேன் - என்றும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...