ஜில்லென குளிரும் காலம் கிறிஸ்மஸ் காலம்தான்

ஜிலலென குளிரும் காலம் கிறிஸ்மஸ் காலம்தான்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

          ஜிலலென குளிரும் காலம் கிறிஸ்மஸ் காலம்தான்

            புல்லணை எங்கும் ஈரம் கிறிஸ்மஸ் நேரம்தான்

            விண்வெளி எங்கும் ராகம் தூதர் பாடல்தான்

            கண்மணி பாலன் இயேசு தூங்கும் நேரம்தான்

 

                        ராரி ராரி ரோ...

                        ராரி ராரி ரோ...

                        ராரிராரி      ராரி ராரி ரோ...

 

1.         பட்டாம் பூச்சி போல நெஞ்சில் சந்தோஷம்

            புல்லாங்குழல் போல மண்ணில் சங்கீதம்

            வானம் பொழிகிறதோ பூமி நனைகிறதோ

            விண்மீன் ஜொலிக்கிறதோ பாதை தெரிகிறதோ

                        குளிர் காலம் பனி தூவும் வெள்ளைக்கோலம்தான்

                        புது விண் மீன் ஒளி தூவும் கிறிஸ்மஸ் நேரம்தான்

                        - ஓ ராரி ராரி ரோ...

 

2.         மண்ணில் சமாதானம் எங்கும் ஆனந்தம்

            மன்னவர் வந்தார் இன்று மீட்பின் ஆரம்பம்

            முன்னே இருந்தவரோ மீண்டும் வருபவரோ

            என்றும் இருப்பவரோ எங்கும் நிறைந்தவரோ

                        இவர்தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்

                        இவர்தானே என் மீட்பர் நான் என்றும் வெல்லுவேன்

                        - ஓ ராரி ராரி ரோ...      

 

2.         ஆடு மேய்க்கும் மேய்ப்பர் தேடியே வந்தார்

            விண்ணகத்து தூதர் பாடியே வந்தார்

            கீதம் ஓரழகோ பெத்லேம் ஓரழகோ

            பாலன் பேரழகோ நாமம் தானழகோ

                        இவர்தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்

                        இவர்தானே என் ஜீவன் இவர் பின்னே செல்லுவேன்

                        - ஓ ராரி ராரி ரோ...      

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு