10 January 2024

உம்மில் நான் வாழ்கிறேன்

உம்மில் நான் வாழ்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

(கொலோ. 2:6, எபே.2:22, 1:23, 5:23, யோ.15:5, 5:17)

 

                        உம்மில் நான் வாழ்கிறேன்

                        உமக்குள்ளே வளர்கிறேன்

1.         ஜீவதத் தண்ணீராம் உமக்குள்ளே

            வேர் கொண்டு வளரும் மரம் நானே

            படர்ந்திடுவேன் நிழல் தருவேன்

            பறவைகள் தங்கும் வீடாவேன்

2.         அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்

            அமைந்து உயரும் கட்டடம் நான்

            பெருங்காற்று அசைப்பதில்லை

            பெருமழையோ பிரிப்பதில்லை

3.         இயேசுவே எனது தலையானீர்

            நானோ உமது உடலானேன்

            உம் நினைவு என் உணவு

            உம் விருப்பம் என் ஏக்கம்

4.         செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்

            கொடியாய் படர்ந்து கனி தருவேன்

            இலைகளெல்லாம் மருந்தாகும்

            கனிகளெல்லாம் விருந்தாகும்

5.         உமது வார்த்தைகள் எனக்குள்ளே

            உந்தன் ஆவி என்னோடே

            மீட்பளிக்கும் நறுமணம் நான்

            கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

 

https://www.youtube.com/watch?v=17lJ0rIMSY4

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...