இருக்கின்றவராய் இருப்பவரே

இருக்கின்றவராய் இருப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இருக்கின்றவராய் இருப்பவரே

            இன்றும் என்றும் மாறாதவர் - 2

            இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே (2)

            இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே -2

 

                        இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்

                        எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர் - 2

                        உம்மை தடுப்பவர் எவருமில்ல

                        உன்னதரே நீர் பெரியவரே - 2 - இருக்கின்றவராய்

 

1.         வாழ வைப்பேன் என்றவர்கள்

            வெறுமையாய் என்னை அனுப்பினாலும்

            வாக்குரைத்த வல்லவரே

            வறட்சியில் வழி திறந்தீரே - 2

                        வாழ்வை அலட்சியம் செய்தவர்கள் (2)

                        வியந்து பார்க்க உயர்த்தினீரே (2) - இயேசைய்யா

 

2.         வாழ முடியாத நிலைகளிலும்

            வாழ வைக்கும் வள்ளல் நீரே

            வீணாக நாட்கள் கடந்திட்டாலும்

            விண்ணவர் வார்த்தை புடமிட்டதே - 2

                        வருத்தம் யாவும் மறக்கச் செய்து (2)

                        வலுவாய் பெருகச் செய்தவரே (2)

 

3.         நீதியின் தேவன் பார்ப்பீரே

            நியாயத்தை என்றும் விசாரிப்பீரே

            நம்பிக்கையெல்லாம் அகன்றாலும்

            நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே - 2

                        நித்தியமான ஆசீகளால் (2)

                        நிறைத்து நிலைக்கச் செய்வீரே (2)

 

https://www.youtube.com/watch?v=W3T-sGw6T9Y

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு