10 January 2024

கல்வாரி மலையோரம் வாரும் கருணை

கல்வாரி மலையோரம் வாரும் கருணை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கல்வாரி மலையோரம் வாரும் - 2

                        கருணை வடிவம் தொங்குதே பாரும்

                   கல்வாரி மலையோரம் வாரும்

                        வாரும் வாரும் வாரும்

 

1.         விண்ணாளும் வேந்தன் புவியோரின் தேவன்

            புண்ணாகி உடலாக தொங்குகிறார் - 2

            கண்ணீர் துடைக்கும் காருண்ய தேவன் - 2

            செந்நீர் வழிந்தோட தொங்குகிறார்

                        தேவாதி தேவன் தொங்குகிறார்

                        உனை மீட்க இரத்தம் சிந்துகிறார்

 

2.         உலகோரின் பாவம் தன்மேல் சுமந்து

            உத்தமர் சிலுவையில் தொங்குகிறார் - 2

            மா பாவி எந்தன் பாவத்தை நீக்க - 2

            மன்னாதி மன்னவர் தொங்குகிறார்

            தேவாதி தேவன் தொங்குகிறார்

            உனை மீட்க இரத்தம் சிந்துகிறார்.

 

https://www.youtube.com/watch?v=Miyua3MT89I

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...