கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                             பல்லவி

 

          கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

            உமக்கே செலுத்திடுவேன்

            ஜீவாதிபதியே உம் நாமத்தை

            என்றும் உயர்த்திடுவேன் - 2

            என் இதய வேந்தனே

            இயேசு மகாராஜனே

            நன்மை செய்யும் தகப்பனே

            நன்றி சொல்லிடுவேன் - 2

 

                                    அனுபல்லவி

 

                        உமக்கு ஸ்தோத்திரம் ஐயா துதிக்கு பாத்திரரே

                        நன்றி ஐயா நன்மை செய்தவரே

                        உமக்கு ஸ்தோத்திரம் ஐயா துதிக்கு பாத்திரரே

                        நன்றி ஐயா நன்மை செய்தவரே

                        உமக்கு நன்றி ஐயா நன்மை செய்பவரே

 

1.         சேற்றிலிருந்து தூக்கினீரே ஸ்தோத்திரம்

            நாற்றம் கழுவி நறுமணம் தந்தீர் ஸ்தோத்திரம்

            அப்பா என்று அழைக்க செய்தீர் ஸ்தோத்திரம் (உம்மை)

            உம் பிள்ளை என்ற உரிமை தந்தீர் ஸ்தோத்திரம்

 

2.         என்னைத் தேடி உலகில் வந்தீர் ஸ்தோத்திரம்

            என்னை உந்தன் சொந்தமாக்கிக் கொண்டீர் ஸ்தோத்திரம்

            எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் ஸ்தோத்திரம்

            என்னோடிருக்க உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம்

            என்னோடு இருக்க உயிரோடு எழுந்தீர் ஸ்தோத்திரம்

 

3.         எல்லையில்லா கிருபைகள் தந்தீர் ஸ்தோத்திரம்

            முடிவே இல்லா இரக்கம் செய்தீர் ஸ்தோத்திரம்

            நிர்மூலமாகாமல் இதுவரை காத்தீர் ஸ்தோத்திரம்

            முற்றும் முடிய இரட்சித்துக் கொள்வீர் ஸ்தோத்திரம்

 

Ps. PRABHA SAM

 

https://www.youtube.com/watch?v=jz2rHL9gQNQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு