தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே

தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே

            என் பாவம் போக்க பொறந்திருக்கும் ஆட்டுகுட்டியே

            தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே

            என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லகட்டியே

 

                        தந்தானே பாட்டுப்பாடுவேன்

                        எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடுவேன்

 

1.         தித்திக்கும் கொம்பு தேனே

            உம்மை எத்திக்கும் சொல்லுவேனே

            ஜீவன் தந்த உம்மைத்தானே - எனக்கு

                        ஜீவன் தந்த உம்மைத்தானே

            உம்மை ஓயாமல் பாடிடுவேனே

 

2.         நெஞ்சில் நெறஞ்ச செல்லமே

            பசும் பால் போல வெள்ளை உள்ளமே

            வாழவைக்கும் நல்ல தெய்வமே - எங்கள

                        வாழவைக்கும் நல்ல தெய்வமே

            உம்மை வாழ்த்தும் போது உள்ளம் பொங்குமே

 

3.         மண்ணில் வந்த மாணிக்கமே

            உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே

            தேடிவந்த கோடி இன்பமே - எங்கள

                        தேடிவந்த கோடி இன்பமே

            உம்மை பாட பாட இன்னல் நீங்குமே

 

- Rev. A. Jeyaprakash, B.A., B.D.,

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு