கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என்

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        (என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

                        என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2

 

            நீர் என் கன்மலை, என் கோட்டை

            என் இரட்சகர், என் தேவன்

            நான் நம்பும் துருகம், என் கேடகம்

            உயர்ந்த அடைக்கலம், இரட்சண்ய கொம்பு - 2

 

                        என் பெலனாகிய கர்த்தாவே

                        நான் உம்மில் அன்புகூருவேன் - 2 - என் கன்மலையானவர்

 

1.         ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்

            கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2

            விசாலமான இடத்திலே என்னை

            கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 - என் பெலனாகிய

 

2.         என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்

            நெருக்கும்பொது நான் அபயமிட்டேன் - 2

            உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி

            என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2 - என் பெலனாகிய

 

3.         கால்களை மான்களின் கால்களைப் போலாக்கி

            உயர்தலங்களில் என்னை நிறுத்தினீரே - 2

            கைகளைப் போருக்கு பழக்குவித்தீரே

            வெண்கல வில்லையும் வளைத்திடுவேன் - 2 - என் பெலனாகிய

 

https://www.youtube.com/watch?v=AemXo5_5ASU

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு