சிலுவையில் வார்த்தை ஏழு மொழிந்தார் இயேசு
சிலுவையில்
வார்த்தை எழு மொழிந்தார்
இயேசு
சிந்தையில்
ஆத்ம பாரம் பெருகிடவே
அவ்வேழு பொன்மொழிகள்
கேட்கும் நேரம்
- 2
பாவ
வழிவிட்டவர்
பாதத்தில் வா
- 2
1. பிதாவே
இவர்களுக்கு மன்னியுங்கள்
தாங்கள்
செய்வது அதை அறியார்களே
என்று
முதல் வார்த்தை
சொல்லியவர் - 2
குருசினில்
தொங்கி உந்தன்
பாவம் தீர்த்தார்
- 2
2. இன்றைக்கு
என்னுடன் நீ பரதீசினில்
இருப்பாய்
என்று சொன்னார்
கள்வனையே
கள்ளனின்
பாவம் தீர்த்த
இயேசு இன்று - 2
உந்தனின்
பாவக்கரை
நீக்கிடுவார்
- 2
3. தாய்க்கு
மகன்தனை கொடுத்த
தேவன்
தம் அன்பு
சீஷனுக்கும்
தாயளித்தார்
ஐங்காயம்
ஏற்றுக்கொண்டு
தொங்கும் போதும்
- 2
பிறர்நலம்
வாழத்தானே
எண்ணங்கொண்டார்
- 2
4. தாய்முகம்
பார்த்து கதரும்
பிள்ளை போலே
பிதாவிடம்
முறையிட்ட ஆட்டுக்குட்டி
ஏலி
ஏலி லாமா
சபக்தானி
- 2
என் தேவா
ஏன் என்னை கைவிட்டீர்
- 2
5. தாகமாய்
இருக்கிறேன் என்று
சொன்னார்
தாங்காத
வேதனையை உடலில்
கொண்டு
காடியில்
தொய்க்கபட்ட
காளானையும்
- 2
கயவர்கள்
தண்டில் மாட்டி
நீட்டினரே-
2
6. முடிந்தது
என்று சொல்லி தலையை
சாய்த்தார்
முன்குறித்திட்ட
வேளை வந்திடவே
பரிகாசம்
நிந்தை எல்லாம்
ஏற்றுக்கொண்ட
- 2
பரிசுத்தர்
இரத்தம் சிந்தி
பாடுப்பட்டார்
- 2
7. பிதாவே
உம்முடைய கைகளிலென்
ஆவியை
ஒப்புவிக்கிறேன்
எனவே
என்று
மகா சத்தமிட்டு
சொல்லி - 2
ஜீவனை
விட்டுவிட்டார்
நமக்காகவே
- 2
- Ratha Benny
https://www.youtube.com/watch?v=jMdg6nX8IEk
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment