கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்

கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்

            பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்

            பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே

            வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே

 

                        நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்

                        நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

                        நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்

                        நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

                        நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் (2)

 

1.         உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்

            முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் - 2

            உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்

            அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல

 

2.         நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்

            இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் -2

            துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான்

            மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் -2 - நீ மேல

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே