திரும்ப முயல்கிறேன்

திரும்ப முயல்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          திரும்ப முயல்கிறேன்

            மனம் திருந்த முயல்கிறேன்

            என் பாவ நிலை விட்டு

            மீள முயல்கிறேன் - 2

 

                        மாய்மால வாழ்க்கையோடு

                        இவ்வுலகினில் வாழ்கிறேன்

                        என் அந்தரங்க அழுக்கை

                        என் தேவரீர் பார்க்கிறீர் - 2

 

1.         ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்

            அப்போது நான் சுத்தமாவேன்

            என்னை கழுவும் அப்போது

            உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

                        பாவியான என் மேல் கிருபையாய் இரும்

                        உம் முகத்தை எனக்கு எப்போதும் மறைக்காதேயும்

                                    பாதகன் நான் பதறுகிறேன்

                                    கண்ணீரோடு கதறுகிறேன்

                                    பிள்ளையாய் என்னை மாற்றிடும் அன்பு நேசரே - 2

 

2.         வார்த்தையை கேட்கிறேன்

            செவி கொடுக்க மறுக்கிறேன்

            பிறர் குறைகள் காண்கிறேன்

            என் குற்றத்தை மறைக்கிறேன் - 2

 

                        மனுஷரை பிரியப்படுத்தும்

                        பொய் வாழ்க்கை வாழ்கிறேன்

                        என் உள்ளான மனுஷனை

                        என் உன்னதர் பார்க்கிறீர் - 2

 

            கபடு நிறைந்த என் உள்ளத்தை

            உம் ரத்தத்தினால் கழுவும்

            காயம் கட்டி கருணையாய்

            கரம் பிடித்து வழி நடத்தும் - பாவியான

 

3.         என்னை தருகிறேன்

            ஜீவ பலியாக

            சுகந்த வாசனையாக

            என்னை ஏற்றுக் கொள்ளும்

            எந்தன் அப்பா நீரே

            உந்தன் பிள்ளை நானே

            தூரம் போன என்னை

            தூக்கி எடுத்துக்கொள்ளும் - 2 - பாவியான

 

- Jeswin

 

https://www.youtube.com/watch?v=yNyW0zFFG8c

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு