நாத நற்சொருபா நய கீத தற்பெருமா

நாத நற்சொருபா நய கீத தற்பெருமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

இராகம்: ஹேமவதி   

தாளம்: திஸ்ரசாப்பு தாளம்

 

                             பல்லவி

 

                   நாத நற்சொருபா நய கீத தற்பெருமா

                        நித்திய கர்த்தனுன் நன்னடி போற்றினேன்

                        நித்திய நின்னருள் தா

 

                              சரணங்கள்

 

1.         சந்நிதி வந்துனை பணிந்தேன்

            சந்ததம் அன்புடன் கனிந்தேன்

            சொந்த மகவென வந்திருந்தென்னுடன்

            சிந்தை களித்திட வா

                        என்றென்றும் உள்ளவா

 

2.         நிதியுன் நிறைந்த நித்தியனாய்

            கதி தரும் உயர் சற்குருவாய்

            நிகரில்லா நிற்கும் பரா   நி த நீ ப த நி சா

            நிதமும் கருணை புரியும் உன்னத சர்வேசா

 

3.         சத்திய வேதனுத்தமர் பணியும்

            சத்திய நாதன் சகமுதநீ

            சத்திர மத்தியில் சித்திர புல்லணையில்

            மனுபுத்திரன் என்று வந்தாய்

                        அருவே திருவே குருவே

 

4.         பன்னிரு நன்மணி யின்னொளி மின்னிடும்

            உன்னத பொன்னகர் கொலுவில் - 2

            சன்னதியின் இரு பக்கமும் நின்றிடும் மா

            நற்கனி என்றும் புசிக்கவுமே

                        வரந் தருவாய் என்றும் துதிப்பேன்

 

https://www.youtube.com/watch?v=QgAhL8ihBTA

 

- (ராசாகிப் ஆபிரகாம் பண்டிதர்) Rao Sahib Abraham Pandithar

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு