08 January 2024

கிறிஸ்து பிறப்பின் நாள்

கிறிஸ்து பிறப்பின் நாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கிறிஸ்து பிறப்பின் நாள்

            இது சந்தோசத்தின் நாள்

            கொண்டாடுவோம் நாம் ஆடிப்பாடுவோம்

                        போடு தனனானா தனானனனா

                        இயேசு எனக்காகப் பிறந்தாரே

                        போடு தனனானா தனானனனா

                        இயேசு உனக்காகப் பிறந்தாரே

                        போடு தனனானா தனானனனா

                        இயேசு நமக்காகப் பிறந்தாரே

 

1.         ஸ்டைலான வீடு கிடைக்கலையே

            முன்னணை மீதிலே தவழ்ந்தாரே

            இரட்சிப்பின் பாலனாய் உருவெடுத்தே

            நம்மை மீட்டிட மலர்ந்தாரே - போடு

 

2.         மெய்ப்பர்கள் தீவிரமாய் விரைந்தனரே

            பாலனை கண்டு பணிந்தனரே

            எல்லா ஜனமும் மகிழ்ந்திடவே

            கிறிஸ்து இயேசு பிறந்தாரே - போடு

 

3.         தீர்க்கர்கள் வாக்கு நிறைவேறிட்டே

            கன்னியின் மகனாய் ஜெனித்தாரே

            மீண்டும் வானத்தில் வருவாரே

            நம்மை அவரோடு சேர்ப்பாரே - போடு

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...