24 January 2024

பனி தூவிடும் இரவில் இந்தப்

பனி தூவிடும் இரவில் இந்தப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பனி தூவிடும் இரவில்

            இந்தப் பாரினில் அதிசயமே

            ஏழையாக இயேசு ராஜன்

            தொழுவினிலே பிறந்தார்

                        ஆ ஆ அல்லேலூயா

                        கீதம் பாடிடுவோம்

                        இயேசு பாலகனை

                        வாழ்த்திடுவோம் - 2

 

1.         விண்ணின் இயேசு பாலன்

            இன்று கந்தை கோலம் ஏற்றார்

            சிந்தை மகிழ்ந்து தேடி

            வந்து மந்தை மேய்ப்பர் பணிந்தார். - 2 - ஆ ஆ

 

2.         வெள்ளி கண்டு பார்த்தே

            மூவர் உள்ளம் மகிழ்ந்து வியந்து

            வெள்ளைப் போளத் தூபம்

            பொன்னும் அள்ளிப் படைத்து தொழுதார் - 2 - ஆ ஆ

 

3.         உள்ளம் படைத்து மகிழ்ந்து

            தேவப் பிள்ளை பாதம் பணிவோம்

            கள்ளம் கபடம் துறந்து

            வானில் வெள்ளை அங்கிகள் தரிப்போம் - 2 - ஆ ஆ

 

https://www.youtube.com/watch?v=F1L5LKfyvVc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...