ஊரெல்லாம் மேளச்சத்தம்
ஊரெல்லாம்
மேளச்சத்தம்
பாரெல்லாம்
பாட்டுச்
சத்தம்
குயிலெல்லாம்
பாட்டுப் பாடும்
மயிலெல்லாம்
ஆட்டமாடும்
குடிசையில
குலவை சத்தம்
கோயிலெல்லாம்
மக்கள் கூட்டம்
பங்காளி சண்டையில்ல
பாசம்தான்
எங்க எல்லை
பூலோகம்
மாட்சிப்
பெற
மனுசனா மண்ணில்
பிறந்தாரைய்யா
1. மன்னாதி
மன்னவரு மனசெல்லாம்
நின்னவரு
சிங்கார
பாலகனா சிங்கம்போல
பிறந்தாரு
மார்கழி
இரவின் குளிரினிலே
மாமரி
மகனாய் வந்துதித்தார்
மாடுகள்
அடையும் தொழுவத்திலே
மனிதருள்
மாணிக்கம் பிறந்தாரே
பூமியில்
நல்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில்
அமைதியை விதைத்திடவே
அமைதியின்
தேவன் அவனியிலே
அழகிய குழந்தையாய்
பிறந்தாரே
மகிழ்ச்சியின்
பாடல் பாடிடுவோம்
மங்கள கீதங்கள்
முழங்கிடுவோம்
2. வறுமை ஒழியனும் வாழ்க்கை
மாறனும்
தேவனின்
மகிமையை தினமும்
பார்க்கனும்
புகழ்
தேடி அலையும் உலகத்தில
பொதுவுடைமை
சித்தாந்தம்
சொன்னவரு
பலகோடி
உள்ளங்கள்
மீட்படைய
பகலவனப்
போல உதிச்சாரு
ஏழ்மையும்
வறுமையும்
ஒழிந்திடவே
எல்லார்க்கும்
எல்லாமுமாய்
இருந்தாரே
உங்க திருமுகத்தை
தினமும் பார்க்கனுமே
உங்க குரலை
தினமும் கேட்கனுமே
விண்ணில்
மகிமை இறைவனுக்கே
மண்ணில
அமைதி மனிதருக்கே
https://www.youtube.com/watch?v=dUqGkhPX6hc
Comments
Post a Comment