24 January 2024

என் ஜீவன் உமக்குள்ளே மறைந்து இருக்கிறது

என் ஜீவன் உமக்குள்ளே மறைந்து இருக்கிறது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          என் ஜீவன் உமக்குள்ளே மறைந்து இருக்கிறது

            என் சுகம் பெலம் யேசுவே எல்லாம்

            உம்மிடம் இருந்து வருகிறது

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         உம் சித்தம் அல்லாது ஓர் முடியும் உதிர்வதில்லை

            உம்மாலே அவை எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது

            உம் உத்திரவின்றி எந்தனின் வாழ்வில்

            ஒன்றுமே அணுகியே வருவது இல்லை - என் ஜீவன்

 

2.         அனுமதி நீர் அளிக்க நன்மைகள் தீமைகளோ

            அடியேனின் வாழ்வினிலே வந்திடுமேயானால்

            அன்புள்ளம் அதை அனுமதித்ததினாலே

            ஆனந்தம் கொள்ளுவேன் அவற்றிற்கெல்லாமே - என் ஜீவன்

 

3.         ஆத்தும ரட்சகனே என் ஆறுதல் நீர் தானே                        

            ஆலோசனை எனக்கு   தினம் அருள்பவர் நீர் தானே 

            பயப்படாதே நான் உன் தேவன் என்று

            பகர்ந்து தைரியம் ஈயும் பரமனும் நீயே - என் ஜீவன்

 

https://www.youtube.com/watch?v=-_p49t6A65Q

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...