08 April 2025

கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்-1

கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

                   கர்த்தாவே என் பெலனே

                        உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்

                        துருகமும் நீர் கேடகமும் நீர்

                        இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர்

 

                             சரணங்கள்

 

1.         மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்

            துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்

            நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப

            உருக்கமாய் வந்து உதவி செய்தார்      

 

2.         தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்

            உத்தமனை நீர் உயர்த்திடுவீர்

            புனிதனுக்கு நீர் புனிதரன்றோ

            சதாகாலமும் ஜெயம் எடுப்பேன்

 

3.         உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்

            உம்மாலே மதிலை தாண்டுவேன்

            சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்

            சதாகாலமும் ஜெயம் எடுப்பேன்

 

4.         இரட்சண்ய கேடகம் எனக்கு தந்தீர்

            உமது கரம் என்னை உயர்த்திடுமே

            கர்த்தரை அல்லாமல் தேவன் இல்லை

            அவரே எந்தன் கன்மலையாவார்

 

5.         பெலத்தினால் என்னை இடைகட்டி    

            மான்களின் கால்களைப் போலாக்கி

            நீதியின் சால்வையை எனக்கு தந்து

            உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...