04 April 2025

பாரமில்லையா பாரமில்லையா தேசம் அழிகின்றதே

பாரமில்லையா பாரமில்லையா தேசம் அழிகின்றதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பாரமில்லையா பாரமில்லையா தேசம் அழிகின்றதே

                        யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்

                        என்ற சத்தம் தொனிக்கின்றதே - 2

                        கிருபை வாசல் அடைகிறதே

                        நியாயத் தீர்ப்பு நெருங்கிடுதே

                                    இந்த நாளில் மௌனமாயிருந்தால்

                                    அழிவு என்பது நிச்சயமே - 2

 

                        சேனையாய் எழும்புவோம்

                        யுத்தக் களத்தில் -2

                        அழியும் கோடி மாந்தரை மீட்க

                        இன்றே புறப்படுவோம்

                        அழியும் கோடி மாந்தரை மீட்க

                        இன்றே ஜெபித்திடுவோம்

                                    எங்கள் பாரதம் எங்கள் பாரதம்

                                    இயேசுவின் பாரதம் - 2

 

1.         திறப்பில் நின்று சுவரை அடைக்க

            தேவன் தேடும் மனிதன் எங்கே - 2

            கண்ணீர் சிந்த ஆளில்லை

            கதறி ஜெபிக்க ஆளில்லை - 2

            யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்

            என்ற சத்தம் தொனிக்கின்றதே - 2 - சேனையாய்

 

2.         அறுவடையின் காலமல்லோ

            முடங்கி கிடப்பது நியாயம் தானா - 2

            பாதங்கள் வெண்கலமாகும்

            இடைவிடாமல் போராடி - 2

            வாயில் துதியும் கையில் பட்டயம்

            எழுந்து நின்று போரடிப்போம் - 2 - சேனையாய்

 

 

- Pastor Lucas Sekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...