காலம் தவறாமல் உந்தன் நாட்களில்
காலம் தவறாமல் உந்தன் நாட்களில்
அருட்பணி செய்வாய்
மகிழ்வுடனே
கர்த்தர் இயேசு நாமம் பரப்பிடவே
வாலிபத்தை அவர்க்காய் அர்ப்பணிப்போமே
சாக்கு போக்கு சொல்ல
காலமில்லையே
1. வழிகாட்டு நீ கை காட்டி இல்லையே
இந்த நாளிலே ஓர் முடிவு செய்வாய்
சொந்த இரட்சகர் உன்
சென்றறிந்தால்
- சாக்கு
2. புன்னகை பொழிய மன்னன் இயேசுவே
சின்னஞ்சிறு பாலர்கள் உள்ளத்தில் வைப்போம்
ஊக்கமான ஜெபத்தால் ஆக்கம் தருவார்
காக்கும் கரத்தால் உன்னைத் தாங்கிடுவாரே - சாக்கு
3. ஊழியத்தின் களத்தை மறந்திடாதே
ஊதியமே இல்லை
நீ கலங்கிடாதே
ஆழிசூழ் உலகை ஆளும் தேவனே
ஞானத்தால் நிரப்பி வாழ்வளிப்பாரே - சாக்கு
4. மண்ணுலக மக்கள் நல்வழி செல்ல
மன்னன் இயேசு அன்பினை யாவர்க்கும் சொல்ல
இன்னல் நீங்க ஆவியின் கனியைப் பெற்று
இன்பவழி வாழ்வு
வாய்மை காட்டிடுவோமே - சாக்கு
Comments
Post a Comment